தாம்பரம் காமராஜர் நெடுஞ்சாலையில், PP நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா சங்கத்தின் தலைவர் மகேந்திர பூபதி தலைமையில் நடைபெற்றது.
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருங்களத்தூர் காமராஜர் சாலையில் பீர்க்கன்காரணை பெருங்களத்தூர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா சங்கத்தின் தலைவர் மகேந்திர பூபதி தலைமையில், செயலாளர் கஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவில் சங்க பொருளாளர் ஏ.கே.ரகுபதி் மற்றும் சங்க நிர்வாகிகள், பொது மக்கள் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் திரளாக கலந்து கொண்டனர். தண்ணீர் பந்தல் திறப்பு விழாவையொட்டி பொது மக்களுக்கு தர்பூசணி, வெள்ளரி, நீர் மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
மேலும், இந்த சேவை தொடர்ந்து 60 நாட்கள் தொடர்ந்து நடைபெற அனேகர் உபயம் செய்ய முன் வந்துள்ளது. பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.