கோவை, இருகூர் பகுதியில் இளம் பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் காரில் இருந்து அந்தப் பெண் அலறல் சத்தம் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதால் பரபரப்பு. காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை விமான நிலையம் பின்புறம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவியை மூன்று பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. .

இதை அடுத்து நேற்று இரவு இருகூர் தீபம் நகர் பகுதியில் சென்று கொண்டு இருந்த பெண் ஒருவரை வெள்ளை நிற காரில் வந்த நபர்கள் வலுக்கட்டாயமாக இழுத்து காரில் ஏற்றி சென்றதை அங்கு இருந்தவர்கள் பார்த்து உள்ளனர்.
மேலும் இது குறித்து சிங்காநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் பெண் கடத்தப்பட்டாரா..? அல்லது வேறு ஏதேனும் காரணமா..? யார் அந்த இளம் பெண்..? அந்தக் கார் எங்கு சென்றது என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் காரில் இருந்த பெண் அலறும் சத்தம் கேட்கிறது பின்னர் வேகமாக அந்த காரை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது.
இதனால் அப்பகுதியில் நேற்று பரபரப்பு நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.











; ?>)
; ?>)
; ?>)