சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ சிதம்பரம் பிள்ளையின் 153வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள அவரின் திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. திமுக சார்பில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சியில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ்.எஸ்.கே. ஜெயராமன் துணைத் தலைவர் லதா கண்ணன், பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், அவைத் தலைவர் தீர்த்தம்பேரூர், துணை செயலாளர்கள் ஸ்டாலின், கொத்தாலம், செந்தில் வார்டு கவுன்சிலர்கள் முத்துசெல்வி, சதீஷ், செல்வராணி, குருசாமி, நிஷா கௌதமராஜா மற்றும் மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி, கவுதம், சுரேஷ் முட்டை கடை காளி, சங்கங்கோட்டை ரவி சந்திரன், மணிபாண்டி, சரவணன், சங்கையா பாஸ்கரன், திருவேடகம்ராஜா என்ற பெரிய கருப்பன் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் சௌந்தரபாண்டி ஆர்.எம்.எஸ். காலனி நூலகர் ஆறுமுகம் மற்றும் சபாபதி செல்வம் பெருமாள் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் வ. உ. சி. யின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பேரூர் செயலாளர் முருகேசன், வார்டு கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன், டீக்கடை கணேசன் சண்முக பாண்டியராஜா, இளைஞரணி மாவட்ட இணை செயலாளர் கேபிள் மணி, பேரூர் துணை செயலாளர் தியாகு, மருத்துவர் அணி இணை செயலாளர் கருப்பட்டி கருப்பையா, மன்னாடிமங்கலம் தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி, சோழவந்தான் சிவா, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் தண்டபாணி, பெருமாள், சிலம்பு செல்வன், 10 வது வார்டு மணிகண்டன் 1வது வார்டு முத்துக்குமார், பேட்டை சுரேஷ், மாரி பாலா, ஜெயபிரகாஷ், ஜூஸ் கடை கென்னடி, பிரேம், சிலம்பு செல்வன் உள்பட அதிமுகவினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

காங்கிரஸ் சார்பில் நகர செயலாளர் முத்துப்பாண்டி தலைமையில் வ உ சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பேரூர் செயலாளர் திரவியம் தலைமையில் வ உ சி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
