திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்கு “திருடனை பதவி விலகு” என்ற முழக்கத்துடன் கையெழுத்து இயக்கத்தை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாகூர் இன்று கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு தேநீர் கடை பழக்கடையில் சென்று நேரடியாக பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில்: வாக்குத் திருட்டு செய்து மூன்றாவது முறையாக பாஜக அரசு ஆட்சி அமைத்திருக்கிறது என்பதை மக்களுக்கு எடுத்து சொல்ல இந்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வாக்கு திருட்டு ஒரு தொகுதிக்கான ஆதாரத்தை ராகுல் காந்தி வெளியிட்டிருந்தார் அடுத்த அறிவிப்பு வெளிவரும் என்று சொல்லி இருக்கிறார் அது ஹைட்ரஜன் பாம் மாக இருக்கும்.

துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணியினர் வாக்குகள் குளறுபடி குறித்த கேள்விக்கு: வாக்கு சீட்டுகள் பெற்று வாக்களிப்பது தான் அதில் எந்த கட்டுப்பாடும் இல்லை நாங்கள் எதிர்பார்த்தது 315 வாக்குகள் எங்களுக்கு கிடைத்தது 300 வாக்குகள் 15 வாக்குகள் செல்லாத வாக்குகள் ஆகிவிட்டது.
தவெக தலைவரின் சனிக்கிழமை தேர்தல் பரப்புரை தொண்டர்கள் கூட்டம் குறித்த கேள்விக்கு:
அரசியல் கட்சியினருக்கு கூட்டம் வருவது சகஜம். முதல்வருக்கு கிருஷ்ணகிரியில் கூட்டம் வந்தது. அரசியலுக்கு வரது மகிழ்ச்சி மக்கள் கூட்டம் வரதுக்கு மகிழ்ச்சி மக்கள் மன்றத்தில் கருத்தை முன்வைக்கிறார் மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும் வார இறுதி பிரச்சாரம் என்பதில் கருத்து இல்லை ஜெயலலிதா அம்மையார் மதியத்திற்கு மேல் தான் பிரச்சாரம் மேற்கொண்டார் எப்போது பிரச்சாரம் என்பது முக்கியமில்லை மக்கள் ஏற்றுக் ஏற்று கொள்கிறார்களா என்பது தான் முக்கியம் அதை தேர்தலில் வாக்குகளாக காட்டப் போகிறார்கள்.
2026 தேர்தலில் வாக்கு திருட்டுகள் நடைபெறாமல் இருக்க ஏதும் நடவடிக்கை மேற்கொள்ளீர்களா என்ற கேள்விக்கு:
பாஜக போற போக்க பாத்தா கடை காலி ஆகிடும் போல ஜெயலலிதாவின் மகள் என்று சொல்லக்கூடிய ஒருவர் இடம் அமித்ஷா முப்பது நிமிடம் பேசுகிறார் என்ற கதை கேட்ட போதே இந்த கதை முடிந்துவிட்டது. செங்கோட்டையனிடம் பேசுகிறார் அந்த அம்மாவிடம் பேசுகிறார் அமித்ஷா அதிமுகவை என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. ஓபிஎஸ்யை நடுத்தெருவில் நிறுத்தி விட்டார்கள் அதிமுகவின் கடைசி காலம் வந்துவிட்டது எப்போது அழைத்தாலும் செல்லக்கூடிய நிலைமையில் எடப்பாடி உள்ளார் 26 தேர்தல் அதிமுகவுக்கு முடிவு தேர்தல் ஆக ஆகிவிட்டது முடித்து வைத்த பெருமான் அமித்ஷாவாக இருப்பார்.
அனைவரையும் ஒன்றிணைத்து திமுகவை வீழ்த்துவோம் என நயினார் கூறியது கேள்விக்கு:
ஜெயலலிதா அம்மையாரின் மகள் என்று சொல்லக்கூடிய வரிடம் அமித்ஷா பேசியுள்ளாரே இதை பத்தி என்ன சொல்கிறார் நயினார் அதிமுக தொண்டர்கள் என்ன நினைப்பார்கள் இதைப்பற்றி எடப்பாடியிடம் கேளுங்கள் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ்ஐ சந்திக்க டைம் ஒதுக்கவில்லை அமித்ஷா ஜெயலலிதாவின் மகள் என்று சொல்லிக் கொள்பவரிடம் 30 நிமிடம் பேசி இருக்கிறார். ஒவ்வொரு மானமுள்ள அதிமுக காரனும் யோசிக்கணும் அமித்ஷா எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்திட்டார். அதிமுகவினர் அதுக்கப்புறமும் இந்த பஸ்ஸில் தான் செல்வேன் என்று துங்கிட்டு இருந்தால் அதிமுகவினரை என்ன சொல்வது.
விஜயை முதல்வர் விமர்சனம் குறித்த கேள்விக்கு:
களத்திற்கு வந்து விட்டார்கள் பல கருத்துக்கள் வரும் முதல்வரை பொருத்தவரைக்கும் சொன்ன வாக்குறுதிகளும் பல சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளார் பல புதிய திட்டங்கள் கொண்டு வந்துள்ளார்.
ஆசியக் கோப்பை இந்தியா பாகிஸ்தான் போட்டி பார்த்தீர்களா? போட்டியின் இறுதியில் வீரர்கள் கைகுலுக்காமல் சென்றது குறித்த கேள்விக்கு:
நான் பாக்கலப்பா அமித் ஷா பார்த்தாரா பாஜக காரர்கள் பார்த்தாராகளா என்று கேட்கணும் அமித்ஷா மகன் ஜெய்சாவால் நடத்தப்பட்ட மேட்ச் இந்தியாவில் சிந்தூர் நடந்தவுடனே தண்ணீர் கொடுக்க மாட்டோம், பஸ் விட மாட்டோம், டிரெயின் விடமாட்டோம் என்று சொன்னார்கள். இப்போது மட்டும் அமிஷ்சா பையன் சொன்னவுடன் எல்லோரும் மேட்ச் பார்த்திருக்கிறார்கள் மானமுள்ள பாஜக காரர்கள் இத பத்தி பதில் சொல்ல வேண்டும்.