விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மதுரையில் நடைபெற உள்ள தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வெற்றி பெற வேண்டுமென தென்மேற்கு மாவட்ட செயலாளர் ஜெகதீஸ்வரி தலைமையில் விருதுநகர் தென்மேற்கு மாவட்ட பொருளாளர் முரளி மோகன் ஏற்பாட்டில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்த ரத்ததான முகாமில் இராஜபாளையம் தளவாய்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் ரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் ஆளன்ராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
