• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோவையில் வ.உ.சி.யின் பிறந்தநாள் விழா..,

BySeenu

Sep 5, 2025

கோவையில் வ.உ.சி.யின் பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், வ.உ.சி.யின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது, மேலும் அவரின் தியாகங்களையும், சுதந்திரப் போராட்டப் பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 154 வது பிறந்தநாள் விழா வ.உ.சி மைதானத்தில் அமைந்து உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் கோவை மத்திய சிறைச்சாலை முகப்பில் வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்குக்கு அருகில், அவரின் திருவுருவப்படத்திற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.