விசிக திருமாவளவன் கார் மீது டூவீலர் மோதிய சம்பவம் கண்டித்து, மதுரை ஒத்தக்கடையில் விசிகவினர் சாலை மறியல் செய்தனர். டெல்லியில் உச்சநீதிமன்ற நீதிபதி அவமரியாதை செய்யப்பட்டதை கண்டித்து சென்னை அருகே
ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. பங்கேற்றார். பிறகு அவர் தனது காரில் புறப்பட்டு சென்றபோது, திடீரென அவரது கார் மீது பைக் ஒன்று மோதியது. இதைத் தொடர்ந்து, பின்னால் வந்த விசிகவினர் டூவீலர் ஓட்டி வந்தவரிடம் தகராறு செய்து அவரை எச்சரித்தனர். இதனால் டூவிலர் ஓட்டி வந்தவர் கோபமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திருமாவளவன் சென்ற கார் மீது டூவீலர் மோதிய சம்பவத்தில் சதி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இச்சம்பவத்தை கண்டித்தும், டூவீலர் ஓட்டி வந்த நபர் குறித்து விசாரிக்க வலியுறுத்தியும் மதுரை ஒத்தக்கடையில் விசிக கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம் தலைமையில் சாலை மறியல் நடந்தது. மாவட்ட செயலாளர் அரச முத்துப்பாண்டி உட்பட 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றவர்களிடம் ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் சிவபாலன் பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தார். இந்த மறியலால்,
சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.