• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரையில் “விருமன்” படத்தின் வெளியீட்டு விழா…

Byகாயத்ரி

Jul 28, 2022

நடிகர் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விருமன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கார்த்தியோடு அதிதி ஷங்கர், ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த தேதியை படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தில் இடம்பெற்ற ‘கஞ்சா பூவு கண்ணால’ பாடல் வெளியாகி இணையத்தில் ஹிட் ஆனது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடக்கும் என சொல்லப்படுகிறது.
வழக்கமாக படங்களின் ஆடியோ ரிலீஸ் விழா சென்னையில் நடக்கும். ஆனால் படத்தின் கதைக்களம் மதுரை என்பதால் படக்குழுவினர் மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.