• Mon. Apr 21st, 2025

வைரலான ஆபாச வீடியோ… பாஜக கே.டி.ராகவன் எடுத்த அதிரடி முடிவு!..

By

Aug 24, 2021

பாஜக மாநில செயலாளராக இருப்பவர் கே.டி.ராகவன், மூத்த தலைவர்களில் முக்கியமானவர். இவர் சட்டை அணியாமல் பெண் ஒருவருடன் வீடியோ காலில் ஆபாச சாட்டிங் செய்த கே.டி.ராகவனின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்து கடவுள்களை யாராவது விமர்சித்தால் சீறிக்கொண்டு சண்டையிடும் கே.டி.ராகவன் வீட்டில் உள்ள கடவுள் சிலைகள் முன்பாக தான் இந்த ஆபாசத்தை அரங்கேற்றியுள்ளார். கே.டி.ராகவனின் வீடியோவை அதிக அளவில் ஷேர் செய்து சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கே.டி.ராகவன் அறிவித்துள்ளார். தமிழக பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து கொள்வதாக அறிவித்துள்ள கே.டி.ராகவன், தமிழக மக்களுக்கும், கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும் என்றும், என்னையும், என் கட்சியையும் களங்கப்படுத்தும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது குற்றச்சாட்டை மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன் மீது பரப்பட்டு வரும் அவதூறு வீடியோ குறித்து சட்டப்படி சந்திப்பேன் என்றும் கே.டி.ராகவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.