அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த கிராம கமிட்டி மற்றும் தென்கால் விவசாய சங்கம் என இரண்டு தரப்பு அனுமதி கேட்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் அதனால் தங்களுக்குள் பேசி முடித்துவிட்டு வாருங்கள் எனவும்.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகம் நடத்தும் என கிராம மக்களிடம் கூறிவிட்டு அவனியாபுரத்தில் இருந்து அமைச்சர் மூர்த்தி புறப்பட்டுச் சென்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு கமிட்டியினர் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நீதிமன்றம் உத்தரவுபடி அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு கமிட்டிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஒரு தரப்பிற்கு சாதகமாக அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகம் செயல்படுவதாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து உள்ளனர்.




