மதிமுக முதன்மை செயலாளர் மற்றும் திருச்சி எம்பி-யும்மான துறை வைக்கோ கட்சி நிர்வாகியின் திருமண விழாவிற்காக திண்டுக்கல் வந்திருந்தார்.
அப்போது திண்டுக்கல், சீலப்பாடி பைபாஸில் திண்டுக்கல் நிர்வாகிகளால் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது,
அதிமுகவில் செங்கோட்டையன் நீக்கம் குறித்த கேள்விக்கு

அதிமுகவின் முடிவு. இது குறித்து செங்கோட்டையன் இடம் கேட்க வேண்டும். உட்கட்சி விவகாரத்தில் கருத்து சொல்ல விரும்பவில்லை. அது ஆரோக்கியமாக இருக்காது.
அதிமுக மிகப்பெரிய இயக்கம். முக்கிய நிர்வாகிகளை நீக்கம் செய்வது குறித்து கட்சிக்குள் பேசிக் கொள்வார்கள். செங்கோட்டையன் தரப்பு நாயம் குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.
பாஜக அதிமுகவை பின்னால் இருந்து இயக்குகிறது என்று குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால் இதில் பாஜக இருக்கிறதா? இல்லையா? என்று தெரியவில்லை.
ஆனால் கடந்த காலங்களில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கூட்டணியில் பிளவுகள் ஏற்படுத்தி இருக்கிறார்கள் அந்த சந்தேகத்தின் அடிப்படையில், அதனால் அதிமுக பிரச்சனையில் பாஜக இருக்குமா? என்று சந்தேகம் வருகிறது. சில மாநிலங்களில் பாஜக இது போன்று முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறேன் என்பது பாஜக மாநில தலைவரை கூற்று.
மற்ற கட்சிகளை பலவீனப்படுத்துவது பாஜக செய்து வருகிறது. தவறான விஷயம் ஜனநாயகத்திற்கு புறம்பானது.
இந்தியாவில் பாஜக மற்றும் அல்லாமல் பல்வேறு கட்சிகள் மற்ற கட்சிகளில் பிளவை ஏற்படுத்துகிறது. இது ஜனநாயகத்தில் ஆரோக்கியமானது கிடையாது.
விஜய் வருகை குறித்து பலமுறை கருத்து தெரிவித்துள்ளேன். தமிழ்நாட்டில் விஜய்க்கு இலட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். இதே மறுப்பதற்கு கிடையாது. விஜய் அரசியலில் மிகப்பெரிய உந்து சக்தியாக இருப்பார்.
எம் ஜி ஆர் போல் முதன்மையான இடத்தை அடைவார் என்பது செயல்பாடுகள் பொறுத்தே அமையும். அடுத்த தேர்தலில் எம்.ஜி.ஆர் போல் இடத்தை அடைவார் என்பது வாய்ப்பே கிடையாது.
விஜய்க்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. அதனை வைத்து உச்ச நிலைக்கு வர முடியாது என்பது இல்லை. வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அடுத்த வருடமே எம்ஜிஆர் போல் வருவார் என்பது வாய்ப்பு கிடையாது.
மதிமுக 2026 தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடுமா என்ற கேள்விக்கு
ஒவ்வொரு கட்சியும் தனி சின்னத்தில் நிற்க வேண்டும் என நினைப்பார்கள். கூட்டணி தலைமை, கட்சி தலைமை இதுகுறித்து முடிவு எடுக்கும். அதிகமான சீட்டுகள் குறித்தும் கட்சி தலைமை வைகோவே முடிவெடுப்பார்.
அதிகமான சீட்டு குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது வரை தொடங்கவில்லை. நாங்கள் எவ்வளவு சீட்டு விரும்புகிறோம். கூட்டணி எத்தனை சீட்டு ஒதுக்குகிறார்கள் என்பதை வெளிப்படையாக தெரிவிப்போம்.
முதலமைச்சர் சுற்றுப்பயணம் குறித்த கேள்விக்கு,
அவர் தனது கடமையை செய்து உள்ளார். இதற்கு முன்பும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளார். இது வரவேற்கத்தக்கது. எடுத்துக்காட்டாக முதல்வர் இருந்து வருகிறார்.
டாஸ்மாக்கில் 40,000 கோடி ஊழல் செய்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியது குறித்த கேள்விக்கு,
குற்றச்சாட்டு குறித்த தரவுகள் இருக்க வேண்டும். விசாரணை நடந்து வருகிறது. சட்டரீதியாக நிரூபணம் ஆகும் வரை அது உண்மையா? பொய்யா? என கூற முடியாது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளில் ஊழல் நடக்கிறது என்ற எடப்பாடியின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு,
மதுரை மாநகராட்சியில் மோசடி புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முற்றிலும் தவறு இல்லை என கூற முடியாது. ஆங்காங்கே சில கருப்பு ஆடுகள் இருக்கத்தான் செய்வார்கள். இது அரசியல் இயக்கங்கள் நிர்வாகத்திலும் உள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் தவறு செய்த அனைவர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதவி நீக்கவும் செய்துள்ளனர். தவறே இல்லாமல் அரசாங்கம் நடத்துவது கஷ்டம்.
சசிகலா சர்க்கரை ஆலை பிரச்சனை பல ஆண்டுகளாக உள்ளது. சி.பி.ஜ விசாரணைக்கு சென்று நீதிமன்றத்திலும் தீர்ப்புகள் வந்துள்ளது. கைது நடவடிக்கையும், சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது.
உண்மையா பொய்யா என்பது நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து அமைந்தது. அரசியல் காரணங்கள் என்று கூற முடியாது.
எந்த நோக்கத்திற்காக திமுக கூட்டணி இணைந்தோமோ அந்த நோக்கத்திற்காக தொடர்ந்து இருந்து வருகிறோம். திமுகவில் நீடிக்கிறோம் தொடர்ந்து நீடிக்க விரும்புகிறோம்.
திமுக கூட்டணியில் தேமுதிக சேர்ந்தால் கூட்டணி பலமடையும் எங்களுக்கு சந்தோஷம் தான். வெற்றிகள் எளிதாக கிடைக்கும்.
2026 திமுக கூட்டணி வெற்றி அடையும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம். முடிவெடுக்க வேண்டியது மக்கள்தான். திமுக கடந்த கால திட்டங்களை வைத்து மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார் என நினைக்கிறோம்” என தெரிவித்தார்.