• Thu. Dec 12th, 2024

குமரி மைலாடி ஆராட்டுவிழவில் விஜய் வசந்த் எம்.பி பங்கேற்பு..!

Byadmin

Nov 24, 2023

தீபாவளி பண்டிகை முடிந்து கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் ஊரில் உள்ள முருகன் கோவில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்து முடிந்து 4ம் நாள் முருகப்பெருமானுக்கு ஆராட்டு விழா மைலாடியில் உள்ள ஆற்றில் நடைபெற்றது. இதில் முருகபெருமானுக்கு 16 வகை அபிஷேகம் நடைபெற்றது இதில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டு முருகபெருமானின் அபிஷேக நிகழ்ச்சி பக்தி உடன் தரிசனம் செய்தார்.
இந்நிகழ்ச்சியை காண சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமம் மற்றும் ஊரில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் முருகனுக்கு அரோகர என கோஷம் முழங்க பக்தியுடன் தரிசனம் செய்தனர் மைலாடி நடசேன். முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் தங்கம், நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் தலைவர் நவின்குமார் என உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மலுங்கூர் முருகன் கோவிலில் ஆராட்டு விழா,மைலாடி புத்தன் ஆற்றின் கரையில் நடந்த ஆராட்டு விழா பல்லாண்டு பாரம்பரியம் மிக்க ஆராட்டு விழா என்றாலும். மைலாடியை சேர்ந்த பி.எம்.பெருமாள் தலைமையில்,மைலாடி பகுதியில் 38_ ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய அன்றைய இளைஞர்கள் ஒன்று கூடி அமைத்த “மைலாடி கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் ஆராட்டு விழாவில் ஐந்து நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சிகள்.இசை, பட்டிமன்றம், நடனம்,வீர விளையாட்டு போட்டிகள் என நடத்தி பரிசு வழங்குவது என்பதுடன். தமிழகத்தின் மிகச்சிறந்த பட்டி மன்ற நடுவர்களான.நெல்லை கண்ணன்,சுகி சிவம்,பங்கேற்ற கடந்த கால ஆராட்டு விழா வரலாற்றில் இவ்வாண்டு விழாவில் பேராசிரியர் ஞானசம்பந்தன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.