விஜயதசமியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்கபைரவி வளாகத்தில் பழங்குடியின குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று (02/10/25) நடைபெற்றது. மேலும் ஆதியோகி, தியானலிங்கம் தரிசனத்திற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்று ஈஷாவிற்கு வருகை புரிந்தனர்.

நம்முடைய பாரத கலாச்சாரத்தில் கல்வி, கலை, தொழில் ஆகியவற்றில் புதிய முயற்சிகளை விஜயதசமி திருநாளில் தொடங்குவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் லிங்க பைரவி வளாகத்தில் ஈஷாவை சுற்றியுள்ள முள்ளங்காடு, தானிக்கண்டி, பட்டியார்கோவில்பதி, மடக்காடு உள்ளிட்ட பழங்குடியின கிராமத்து குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
ஈஷாவைச் சுற்றியுள்ள பழங்குடியின மற்றும் சுற்றிவட்டார கிராமங்களில் இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு தொடர்பான விழிப்புணர்வு, ஊட்டச்சத்து தொகுப்புகள், மருத்துவ உதவிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதனுடன் லிங்கபைரவி வளாகத்தில் அவர்களுக்கான வளையகாப்பு நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. மேலும் ஈஷா வித்யா பள்ளிகளில் பழங்குடியின குழந்தைகளுக்கு இலவச கல்வி மற்றும் அவர்கள் உயர்கல்வி மேற்கொள்வதற்கான கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.