பாளையம் கோட்டை தூய சவேரியார் கல்லூரியில், விஜிபி உலகத்தமிழ் சங்கத்தின் 167- வது திருவள்ளுவர் சிலையை தமிழக சட்டமன்ற சபாநாயகர் திறந்து வைத்தார் .
விஜிபி உலகத் தமிழ் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் வி.ஜி.சந்தோசம் உலகப் பந்தில் இதுவரை 166_ இடங்களில் திருவள்ளுவர் சிலையை அவரது சொந்த செலவில் திறந்து வைத்துள்ளார்.
உலகெங்கும் நீக்கமற திருவள்ளுவர் சிலை திறப்பதை ஒரு சபதம் ஏற்று செயல்படுத்தும் வரிசையில், பாளையம் கோட்டை தூய சவேரியார் கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் சிலை விஜிபி உலகத் தமிழ் சங்கத்தின் தலைவர் முனைவர் வி.ஜி.சந்தோசம் தலைமையில் தமிழக சட்டப்பேரவையின் தலைவர் மாண்புமிகு அப்பாவு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் தூய சவேரியார் கல்லூரியின் அதிபர் அருட் பணி தந்தை இன்னாசிமுத்து, கல்லூரியின் முதல்வர் அருட்பணி தந்தை காட்வின்ரூபஸ், மற்றும் திருநெல்வேலி மாநகராட்சியின் துணை மேயர் கே.ஆர்.ராஜு மற்றும் கல்லூரியின் பல்வேறு துறை பிரிவுகளின் பேராசிரியர்கள் பங்கேற்றனர். திருக்குறள் முத்தோதல், மற்றும் தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது.