• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அதி நவீன சிகிச்சை வசதிகளை மேம்படுத்திய விஜிஎம் மருத்துவமனை

BySeenu

Mar 15, 2025

கோவை மாநகரில் செரிமான நலத்துறையில் பல்வேறு அதி நவீன சிகிச்சை வசதிகளை மேம்படுத்திய விஜிஎம் மருத்துவமனை தற்பொழுது பல்துறை சிகிச்சைகளில் கால் பதிக்க உள்ளதாக மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மோகன் பிரஷாத் தெரிவித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் கடந்த 2009ம் ஆண்டு 40 படுக்கை வசதிகளுடன் இரைப்பை குடல் சிகிச்சைகளுக்கென்று பிரத்யேக மருத்துவமனையாக துவங்கபட்ட விஜிஎம் மருத்துவமனை. தற்பொழுது 150 படுக்கை வசதிகளுடன் அதிநவீன மருத்துவமனையாக திகழ்ந்து வருகின்றது. இந்த நிலையில் இம்மருத்துவமனை தற்போது, பல்துறையிலும் கால் பதிக்க உள்ளது. இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு இன்று மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் மோகன் பிரசாத், மற்றும் மருத்துவர்கள மித்ரா பிரசாத், மதுரா பிரசாத் சுமன், வம்சி மூர்த்தி ஆகியோர் கூறியதாவது..

இந்தியாவின் முன்னணி இரைப்பை, குடல், சார்ந்த மருத்துவமனையாக இம்மருத்துவமனை திகழ்ந்து வருகின்ற நிலையில், மருத்துவமனை வளாகத்தில் 6 தளங்கள் கொண்ட கல்லீரல் மற்றும் சிறுநீரக சிகிச்சைக்கான கட்டிடத்தை அமைத்து இத்துறைகளுக்கும் சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளது. இம்மையத்தில் கல்லீரல், மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, அதிநவீன இருதயவியல் கேத் லேப், பிரத்யேக கல்லீரல் ஐசியு, டயாபடீஸ் பிரிவு, கதிரியக்கவியல், உள்நோயாளிகள் பிரிவு என 6 தளங்களை அறிமுக படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன் திறப்பு விழா வரும் மார்ச் 16ம் தேதி நடைபெற உள்ளதாகவும். இதில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வடமலை, வரலாற்று ஆராய்ச்சி துறை முதன்மை செயலாளர் ஹர்சஹாய் மீனா, உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளான பிரகாஷ், வீர ராகவ ராவ், தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் நாராயணசாமி, உள்ளிட்ட உயர் அதிகாரிகள், அரசு துறை தலைவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைக்க உள்ளதாக தெரிவித்தனர். மேலும் உயிர் காக்கும் உன்னத சிகிச்சைகளை வழங்கும் வகையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்ய தமிழக அரசிடம் முறையான அனுமதியை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தற்போது உடல் பருமனால் மக்களுக்கு தற்போது அதிக அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனை உடலில் துளையிடாமல், வாய் வழியாக எண்டோஸ்கோபி மூலமாக செய்ய கூடிய அறுவை சிகிச்சைகளையும் தற்போது அறிமுகம் செய்து உள்ளதாகவும் இதனால் நோயாளிகள் இரண்டு நாட்களில் வீடு திரும்ப முடிவதுடன் மருத்துவமனையின் கண்காணிப்பில் விரைவில் எடை குறைக்க முடியும் என தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.