மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளான டிபன் பாக்ஸ் கேரியர் வழங்கப்பட்டது.


சுமார் 1500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு முள்ளி பள்ளம் கிளை கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் ஊராட்சி செயலாளர் கேபிள் ராஜா தலைமை தாங்கினார். வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் மாவட்ட விவசாய அணி செயலாளர் வழக்கறிஞர் முருகன் மாவட்ட பிரதிநிதிகள் ஊத்துக்குளி ராஜா பேட்டை பெரியசாமி ஒன்றிய துணை செயலாளர் ராஜா என்ற பெரிய கருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் சுமார் 1500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இருந்து டிபன் பாக்ஸ் கேரியர் வழங்கினார் நிகழ்ச்சியில் அவைத் தலைவர் தீர்த்தம் என்ற ராமன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ரேகாவீரபாண்டி மேலக்கால் சுப்பிரமணியன் பொருளாளர் நீலமேகம் பி ஆர் சி ராஜா முள்ளை வெற்றி மற்றும் குமார் அகமுடையார் சங்கத் தலைவர் கிட்டு என்ற கிருஷ்ணன் காமாட்சி தெய்வேந்திரன் விநாயகபுரம் காலனி சங்கையா என்ற தவம் சோழவந்தான் தவம் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




