• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வேலி மனை பிரிவுகள் விற்பனை துவக்க விழா..,

BySeenu

Jul 21, 2025

கோவை துடியலூர் அருகே அடிஷியா நிறுவனத்தின் சார்பாக ஈக்கோ வேலி மனை பிரிவுகள் விற்பனையை நிர்வாக இயக்குனர் மணிகண்டன் துவக்கி வைத்தார்.

ரியல் எஸ்டேட் துறையில் குறைந்த காலத்தில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனமான கோவையை சேர்ந்த அடிஷியா நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மனை பிரிவுகள் விற்பனை திட்டத்தை துவங்கி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை பகுதியில் ஈக்கோ வேலி எனும் புதிய மனை பிரிவுகள் விற்பனை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

சுமார் 149 வீட்டு மனைகள் அனைத்து வசதிகளுடன் துவங்கப்பட்டுள்ள ஈக்கோ வேலி வீட்டுமனை விற்பனையை அடிஷியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மணிகண்டன் துவக்கி வைத்தார்..

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈக்கோ வேலி மனைப் பிரிவு என்பது, சுற்றுச்சூழல் சார்ந்த மேம்பாடு மற்றும் பாதுகாப்பை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட மனைப்பிரிவு என தெரிவித்த அவர், இப்பிரிவில் மனை வாங்குபவர்களுக்கு, சாலைகள், மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளுடன், பொழுதுபோக்கு அம்சங்களுக்காக பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஈக்கோ வேலி துவக்க விழாவை முன்னிட்டு முதல் ஒரு வாரத்திற்கு மனைகள் வாங்குவோருக்கு பத்திரபதிவு இலவசமாக செய்து தருவதாக கூறினார்.