விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் அனுமதி இன்றி கனிம வளம் கடத்தப்படுவதாக தொடர்ந்து வந்த புகாரின் பேரில் தாயில்பட்டி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பஸ் நிறுத்தத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியாளர் வெங்கடேஷ் தலைமையில் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது விஜயரெங்கபுரம் ஊராட்சியைச் சேர்ந்த மீனாட்சிபுரம் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் இருந்து சாத்தூருக்கு சென்று கொண்டிருந்த லாரிகளை சோதனையிட்டனர். லாரியில் அனுமதி இன்றி நான்கு அரை யூனிட் எம்சாண்ட் மணல் இருந்தது தெரியவந்தது. அதற்கான அனுமதி சீட்டு கேட்டபோது இரண்டு லாரியில் இருந்தும் டிரைவர்கள் திடீரென இறங்கி தப்பி ஓடினார்கள். உடனடியாக அதிகாரிகள் லாரிகளை பறிமுதல் செய்து வெம்பக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
தலைமறைவான லாரியின் உரிமையாளர் மற்றும் டிரைவர்கள் மீது சுரங்கத் துறை உதவி புவியாளர் வெங்கடேஷ் நடவடிக்கை எடுக்குமாறு புகார் செய்தார். அதன் பேரில் வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரன் வழக்கு பதிவு செய்து தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.








