தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் தீயணைப்புத்துறை சார்பாக அக்டோபர் 13 தேசிய மேலாண்மை பேரிடர் தினத்தை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு ஒரத்தநாடு தாசில்தார் யுவராஜ் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேரடியாக செய்து காண்பிக்கப்பட்டது.

பள்ளி மாணவர்கள் தற்பொழுது வரும் தீபாவளி திருநாளில் வெடி வெடிப்பது மற்றும் வீட்டில் பலகாரங்கள் சுடுவதில் ஏற்படும் தீ விபத்துகளை எவ்வாறு தடுப்பது என பிரத்தியேகமாக நடித்துக் காண்பித்தனர் . மேலும் ஆறுகள் மற்றும் குளங்களில் குளிக்கும் மாணவர்கள் மற்றும் முதியோர்களுக்கு ஆபத்தான நிலையில் தண்ணீரில் தத்தளித்தாலோ மூச்சு திணறல் ஏற்பட்டாலோ எவ்வாறு காப்பாற்றுவது என்ற விழிப்புணர்வும், அதே போன்று மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் மின்சாரம், வெள்ள பாதிப்புகளில் இருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வதும் ஆபத்தான நிலையில் உள்ள பொதுமக்களை எப்படி எல்லாம் மீட்டு அவர்களுக்கு முதல் உதவி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகள் மாணவர்களுக்கு செய்து காண்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஒரத்தநாடு தீயணைப்பு துறை நிலைய பொறுப்பு அலுவலர்கள் ஜானகிராமன், வீரமுத்து மற்றும் பத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வீரர்கள் கலந்து கொண்டு பிரத்யேகமாக செய்து காண்பித்தனர். மேலும் இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்