• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா

BySeenu

Jan 10, 2025

காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவையொட்டி அரங்கநாத பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காரமடை அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா கடந்த 31ஆம் தேதி பகல் பத்து உச்சவத்துடன் தொடங்கி தினந்தோறும் அரங்கநாத பெருமாளுக்கு பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்று வந்தது.

இதனை அடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக அரங்கநாத பெருமாளுக்கு திருமஞ்சனம் உள்ளிட்டவைகளைக் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற நிலையில் நம்மாழ்வார் ,ராமானுஜர், திருநங்கை ஆழ்வார் ஆகியோருக்கு முதலில் சொர்க்கவாசல் வழியாக காட்சி அளித்தார்.

அதனை தொடர்ந்து உற்சவரராக ஸ்ரீதேவி பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட ஷேச வாகனத்தில் வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க உற்சவர் அரங்கநாத பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூதேவிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பரமபத வாசல் என்ற சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரங்கநாத பெருமாளை வழிபட்டனர்.