• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உழவே தலை விவசாய கருத்தரங்கம்..,

BySeenu

Jul 12, 2025

விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்திய வர்த்தக சபை கோவை கிளை சார்பாக நடைபெற உள்ள உழவே தலை எனும் விவசாய கருத்தரங்கில் விவசாயிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு இந்திய வர்த்தக சபையினர் கேட்டு கொண்டுள்ளனர்.

கோவையில் இந்திய அளவில் முன்னனி கண்காட்சியாக வேளாண் தொடர்பான அக்ரி இன்டெக்ஸ் கொடிசியா வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதில் கலந்து கொள்ளும் விவசாயிகள் தொழில் சார்ந்து பயன்களை பெறும் விதமாக இந்திய வர்த்தக சபை கோவை கிளை சார்பாக உழவே தலை எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

ஜூலை 13 ந்தேதி , கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ள இந்த விவசாய கருத்தரங்கு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை தலைவர் ராஜேஷ் பி லுண்ட் தலைமையில் நடைபெற்ற இதில்,செயலாளர் பி்ரதீப் ,துணை தலைவர் துரைராஜ் மற்றும் கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் மணிசுந்தர் ஆகியோர் பேசினர்.

ஜூலை 13 ந்தேதி காலை 9.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும் கருத்தரங்கில், விவசாயம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் விவாதங்களும், கலந்துரையாடல்களும் நடைபெற உள்ளதாகவும், குறிப்பாக, புதிய தொழில்நுட்பங்கள், விவசாயத்தில் மேம்பட்ட நடைமுறைகள், சந்தை வாய்ப்புகள் போன்ற தலைப்புகளில் கவனம் செலுத்தப்படும் என தெரிவித்தனர்.