எத்தனையோ போர் படித்து முனைவர் பட்டம் வாங்கியுள்ளனர் அதற்கு முன்பு இதெல்லாம் பெரிய விஷயம் கிடையாது திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் பேட்டி
சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 16 வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று( செப்12) நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கலந்து கொண்டார். இதில், இளங்கலை, முதுகலை, மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் என சுமார் 5 ஆயிரம் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

இந்தநிகழ்வில் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்ரீ கோகுலம் குரூப்ஷேர் மேன் கோபாலன் ஆற்றிய பணிகளை பாராட்டி அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இதையடுத்து மத்திய சட்ட மற்றும் பாராளுமன்ற விவகாரத் துறை இராஜ்ய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உரையாற்றினார், அப்போது அவர் கூறுகையில்,

வணக்கம் சென்னை என்று பேசத் தொடங்கிய அவர் பாரம்பரியமும் நவீனத்துவமும் இணைந்து வாழும் நகரமாக சென்னை திகழ்கிறது, மேலும் உலகத் தரத்திலான கல்வி நிறுவனங்கள் இந்திய முன்னேற்றத்துக்கு பங்காற்றி வருகின்றன என்றார்.
இந்தியாவில் அறிவியல் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும், 108வது இந்திய அறிவியல் மாநாட்டில் இந்தியா அறிவியல் துறையில் வேகமாக வளர்ந்து வருவதாக குறிப்பிடப்படுள்ளோம்,2047 ஆம் ஆண்டிற்கான இந்தியக் கனவை நனவாக்க, அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பாதையில் நாம் உறுதியாக நிலைக்க வேண்டும்,
தொழில் புரட்சி 1.0 — 1780களில் ஆவியந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது.
தொழில் புரட்சி 2.0 — 1870களில் மின்சாரம் மற்றும் பெருமளவு உற்பத்தி தொடங்கியது.தொழில் புரட்சி 3.0 — 1990களில் கணினி மற்றும் மின்னணு சாதனங்கள் வளர்ச்சி பெற்றன. தொழில் புரட்சி 4.0 — இன்று நாம் செயற்கை நுண்ணறிவு, 3D பிரிண்டிங், மெஷின் லெர்னிங், ChatGPT போன்ற கருவிகள் நிர்ணயிக்கும் காலத்தில் உள்ளோம்.பட்டம் பெறும் மாணவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் பொறுப்பு ஏற்று செயல்பட வேண்டும,

தமிழ் கவிஞர் திருவள்ளுவரை மேற்கோள் காட்டிய அவர் கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்றார்.
தொடந்து பேசிய அவர், இந்தியா தற்போது உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உள்ளது, மேலும் 2030க்குள் மூன்றாவது இடத்தை அடையும்,
5,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்றிருப்பது இந்திய சமுதாயத்தின் பல்வகைமையும் உற்சாகத்தையும் பிரதிபலிக்கிறது எனக் குறிப்பிட்டார்.இந்தியாவின் எதிர்காலமாக இருக்கும் உங்களுடன், இந்தச் சிறந்த நகரமான சென்னையில் இணைந்து இருப்பது எனக்கு பெருமை என இவ்வாறு கூறினார்,
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் கூறுகையில்,
கல்லூரி படிக்கும்போது இந்த ஆடையை அணிந்தேன் தற்போது மீண்டும் அணிந்து இருக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது அனைவருக்கும் நன்றி,
எத்தனையோ போர் படித்து முனைவர் பட்டம் வாங்கியுள்ளனர் அதற்கு முன்பு இதெல்லாம் பெரிய விஷயம் கிடையாது, எனது தாயாரும் எழுபது வயதில் கஷ்டப்பட்டு படித்து முனைவர் பட்டம் பெற்று உள்ளார்,எனது பேருக்கு முன்னால் எந்த டாக்டர் பட்டமும் வேண்டாம் என்பதுதான் எனது கருத்து, விரைவில் வேல்ஸ் புரொடக்ஷன் உடன் இணைந்து பணியாற்ற உள்ளேன்,
என்னுடைய விருப்பம் வசதிக்காக புரொடக்சன் நிறுவனம் இனி படம் தயாரிப்பில் ஈடுபடாது என கூறி உள்ளேன் இவ்வாறு அவர் கூறினார்,