• Fri. Apr 26th, 2024

உலகின் சிறந்த 50 ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை பல்கலை 48-வது இடம்…

Byகாயத்ரி

Jun 9, 2022

ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள உயர்க் கல்வி நிறுவனங்களின் செயல்திறன், ஆராய்ச்சி, மாணவர்-ஆசிரியர் உறவு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப் பட்டியலை QS நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் QS வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 50 ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 3 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. அதில் சென்னை பல்கலை 48-வது இடத்திலும், 47- வது இடத்திலேயே ஐஐடி ரூர்கியும், 37- வது இடத்தில் ஐஐடி கௌஹாத்தியும் உள்ளன. கல்வி மதிப்பீடு, ஊழியர்கள் மதிப்பீடு, பேராசிரியர் மற்றும் மாணவர் விகிதம், ஆராய்ச்சி வெளியீடுகள், சர்வதேச பேராசிரியர்கள் விகிதம், சர்வதேச மாணவர்கள் விகிதம் போன்றவற்றின் அடிப்படையில் இந்த தர வரிசை வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *