உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்பு மதுரை மாவட்டம் சோழவந்தானில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்றதை முன்னிட்டு, மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக திமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். பேரூர் துணைச் செயலாளர் ஸ்டாலின் தலைமையில் முன்னாள் பேரூர் செயலாளர் முனியாண்டி மாவட்ட பிரதிநிதி சுரேஷ் ஒன்றிய பிரதிநிதி கவுதம ராஜா நாலாவது வார்டு கவுன்சிலர் சிவா இரண்டாவது வார்டு பிரதிநிதி சதீஷ் வார்டு செயலாளர் முத்துவேல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




