விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே அமைந்துள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு புதன்கிழமை பிறந்த ஏழு குழந்தைகளுக்கு விருதுநகர் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கே. கே. எஸ். எஸ். ஆர். ஆர். ரமேஷ் மற்றும் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், இராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ராஷ்யாம் ஆகியோர் தலைமையில் இராஜபாளையம் தெற்கு நகர செயலாளர் ராமமூர்த்தி, வடக்கு நகர செயலாளர் மணிகண்ட ராஜா முன்னிலையில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாசறை ஆனந்த் ஏற்பாட்டில் ஏழு குழந்தைகளுக்கு அரை கிராம் தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் மகப்பேறு மருத்துவமனையில் பணிபுரியக்கூடிய துப்புரவு பணியாளர்களுக்கு வேஷ்டி, சேலை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதேபோல் சங்கரன்கோவில் முக்கு பகுதியில் தெற்கு நகர கழக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.








