தமிழ்நாடு துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு தாம்பரம் மாநகர மேற்கு பகுதியில் திமுக சார்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தாம்பரம் மாநகர செயலாளரும், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ஆர். ராஜா அவர்களின் ஆலோசனையின்படி, மாநகர மேற்கு பகுதி செயலாளரும் தாம்பரம் மாநகராட்சி 5வது மண்டல குழு தலைவருமான எஸ். இந்திரன் அவர்களின் தலைமையில் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
மேற்கு பகுதியின் பல வார்டுகளில் நடைபெற்ற இவ்விழாவில்:

62வது வார்டில்: வட்ட செயலாளர் பிரபாகரன் 63வது வார்டில்: மாநகர உறுப்பினர் ஜோதிகுமார், கழக பேச்சாளர் கி. வேல்மணி, கோமதி லோகநாதன்
48வது வார்டில்: பகுதி அவைத்தலைவர் முனுசாமி, மாநகர உறுப்பினர் சசிகலா கார்த்திக், இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திக் 64வது வார்டில்: ரமேஷ்பாபு
46வது வார்டில்: ரமணி ஆதிமூலம், வட்டச் செயலாளர் செழியன், பகுதி இளைஞரணி பிரதீப் 47வது வார்டில்: முருகன், கலைவாணன் ஆகியோரின் ஏற்பாட்டில் நிகழ்ச்சிகள் பல இடங்களில் நடைபெற்றன.

மாநகர மேற்கு பகுதி செயலாளர் மற்றும் மண்டல குழு தலைவர் எஸ். இந்திரன் அவர்கள் விழாக்களில் கலந்து கொண்டு திமுக கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அறுசுவை உணவு வழங்கினார்.
இவ்விழாவில் பகுதி கழக நிர்வாகிகள் லோகேஷ், சீனிவாச, குமார், திவாகர், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் சிவ சுப்பிரமணியன், இளைஞரணி நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.








