• Fri. Jan 2nd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

உதயநிதி பொறாமை பட்டுக் கொண்டிருக்கிறார் -நடிகை கஸ்தூரி பேட்டி..,

ByKalamegam Viswanathan

Jan 2, 2026

பாஜக ஆதரவாளரும் நடிகையுமான கஸ்தூரி திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் முன்கூட்டியே அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துகளையும் இப்போது தெரிவிக்கிறேன் ஆண்டில் துவக்கத்தை காசி விஸ்வநாதர் கோவில் இடம் இருந்து துவக்குகிறேன்.

நாட்டில் பெண்கள் குழந்தைகள் வெளியிலிருந்து வரக்கூடிய புலம்பெயர் தொழிலாளர்கள் ஆசிரியர்கள் ஊழியர்கள் பொதுவாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பொதுமக்கள் அனைவருக்கும் நல்ல காலத்தை கொடு உண்மையான வெளிச்சத்தை விடியலையும் கொடுக்க வேண்டும் என்று காசி விஸ்வநாதன் சாமியை கேட்டுக் கொள்ளப் போகிறேன். திருப்பரங்குன்றம் மலையில் எப்படி தீபம் ஏறிய போகிறதோ அதே போல எங்கள் வாழ்விலும் வெளிச்சம் வர வேண்டும்.

விடியல் தரப் போறாரு என்று சொன்னார்கள் விடியல் தந்து விட்டார் என்று சொன்னால் பேச்சு மாறியதாக ஆகிவிடும் என்பதால் அதை இன்னும் ஃப்யூச்சர்லயே வைத்திருக்கிறார்கள். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நம் மொழி தெரியவில்லை. ஆனால் அவர்கள் கழுத்தில் வைத்த கத்தியை அவர்களை தாக்குவது என்பது சொல்வதற்கு பதறுகிறது.

அது ஓய்வதற்குள்ளாகவே ஜமால் என்கிற ஒரு இஸ்லாமிய பெரியவருக்கும் அதே போல் தாக்குதல். ஜாதி மதம் மனிதம் எல்லாத்தையும் கடந்து என்ன இருக்கிறது என்று பார்த்தால் போதை தான் இருக்கிறது. எனது ஸ்டுடியோ 10 வருடமாக நடத்தி வருகிறேன் இங்கு இருப்பவர்களை காவல்துறையினர் அடித்தால் கூட அவர்கள் பயப்பட மாட்டேங்குறாங்க என்று ஒரு இசையமைப்பாளர் சொல்கிறார்.

நீர் பூத்த நெருப்பைப் போல இது தலைப்பு செய்தியாக மட்டும் ஆகிவிட்டது முதலில் திராவிட இயக்கத்தை தொடங்கும் போது ஒரு சமூகத்தினர் பிராமண சமூகத்தை பார்த்து வந்தேறி என்றார்கள் அதன் பிறகு வட இந்தியர்களை பார்த்து எழுதி பேசுபவர்கள் என்று சொன்னார்கள் அதன் பிறகு பாஜக என்று பேச்சாண்டி காமித்தீர்கள் தற்போது வடக்கிலிருந்து வயிற்று பிழைப்பிற்காக வருபவர்களை வடக்கன் வீடா வாயன் என்று அமைச்சர்களை பேசுகிறார்கள்.

அவன் நம்ம ஆள் இல்லை என்னும் விஷத்தை பரப்பி விட்டார்கள். வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் வருவதற்கு பயப்படுகிறார்கள்.

பீகாரில் நடைபெற்ற பிரச்சனையின் போது ஸ்டாலின் லெட்டர் எழுதி அவ்வளவு பெரிய பிரச்சனை நடத்தினார்கள் எங்கள் தமிழகத்தில் அனைவரும் நல்லபடியாக இருப்பதாக சொன்னார்கள் இதுதான் அந்த நல்லபடியா. இரக்கத்தினால் என்பதற்காக இல்லை மறுநாள் எங்க ஆளையே வெட்டி விட்டோம் என்று சொல்கிறார்கள் இது வெட்கக்கேடாக இல்லையா. மூளைக்கு மூளை சாராயமும் போதை பொருளும் கிடைக்கிறது இதெல்லாம் எந்த கணக்கில் வருகிறது. கேட்டால் இரும்பு கரம் அந்த கொம்பனும் குறை சொல்ல முடியாது என்று சொல்கிறார்கள் உங்களுக்கு ஓட்டு போட்டவர்களை ஆறாம் தேதி போராட்டம் அறிவித்திருக்கிறார்கள்.

இத்தனைக்கும் அது புரிய கோரிக்கை கூட இல்லை உங்கள் தேர்தல் வாக்குறுதி தான் அடுத்த தேர்தல் வந்துவிட்டது எப்போதுதான் நிறைவேற்றுவீர்கள்வில் என்னும் காரணத்திற்கு தான் போராடுகிறார்கள். இன்னும் ஒரு துறையில் மட்டும் தான் யாரும் போராட்டம் நடத்தவில்லை அதுவும் மதுவிலக்கு துறை தான் அவர்களையும் போதையில் வைத்திருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் தமிழ்நாட்டை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினி சொன்னார் அவர் இன்று என்ன சொல்கிறார் என்று கேட்க விரும்புகிறேன் கடவுள் மட்டும்தான் என் அப்பன் சுப்பிரமணியசாமி மட்டும்தான் தமிழகத்திற்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்க முடியும்.

நம்பிக்கைதானே வாழ்க்கை.

உயர்வகை கஞ்சா நேற்று கிலோவாக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது படித்திருக்கிறார்கள் ஓதி என்று கேள்விப்பட்டேன்

நமக்கு கேஜி என்று தான் தெரியும் என்று கேஜி கேஜியாக ஓஜி கிடைக்கிறது. அதைத்தான் சுகாதாரத்துறை அமைச்சர் ஜீரோ என்று சொல்கிறார் போல யார் அந்த சார் என்று கேட்டதற்கு யாரும் இல்லை என்று சொன்னார்கள் இப்போது எங்கே அந்த கஞ்சா என்று கேட்டால் எங்கேயும் இல்லை என்று தான் சொல்வார்கள். அங்கொன்று இங்கொன்று செடில வளரத்தான் செய்யத்தான் செய்யும் அதேபோல போதை அடிப்பார்கள் வெட்டி சாய்பாபார்கள் என்று அமைச்சர் பெருமக்கள் இப்படியா பேசுவார்கள்.

அது குற்றமில்லை பாராட்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் மிகப்பெரிய சக்தியான அதிமுகவும் தேசிய தலைமை என பாஜகவும் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அதை பார்த்து உதயநிதி பொறாமை பட்டு கொண்டிருக்கிறார்கள் அவர் சொல்வது பாராட்டு. அதை அவர் ட்விஸ்ட் பண்ணி சொல்கிறார். யாரும் ஒன்றாக இருக்கக் கூடாது இவர்கள் மட்டும் ரிலீசாக ஏமாற்றலாமா அவர்களுக்கு ஓட்டு போட்ட அனைவரும் மனசு மாறி விட்டார்கள் மைனாரிட்டி ஓட்டல் தான் மிதத்தில் இருக்கிறார்கள் ஆனால் அவர்களை நான் களத்தில் சந்தித்து அவர்களே மாற்றம் வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பூரண சந்திரன் என்னும் தம்பி திமுகவுக்கு ஓட்டு போட்டார்கள் உதயசூரியனை தாண்டி யோசிக்காத குடும்பத்தில் ஒரு உயிர் போனது ஆனால் அதை கூட அரசியல் ரீதியாக பார்த்து மனிதாபிமானம் இல்லாமல் இருக்கிறார்கள். தற்கொலை செய்து கொள்ளாதீர்கள் என்று சொல்லக்கூடாது அந்த குடும்பத்திற்கு யாரும் இல்லை தாசில்தார் மட்டும் வந்திருக்கிறார்.

மனைவியால் தற்கொலை செய்து கொண்டதாக பொய் சொல்கிறீர்கள். நாம் எப்படி இருப்போமா அப்படித்தான் மற்றவர்களை சந்தேகப்படுவோம் நல்லவர் பெண்களுக்கு நல்லவர் தான் தெரிவார்கள் மற்றவர்கள் எல்லாமே தப்பாகத் தான் தெரியும் என நடிகை கஸ்தூரிக் கூறினார்