• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

*தேசிய ஒற்றுமை தினத்தை கொண்டாட கன்னியாகுமரி முதல் குஜராத் வரை இருசக்கர வாகன பேரணி*

குஜராத் மாநிலம் நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ள “ஒற்றுமையின் சிலை”என்று அழைக்கப்படும் “சர்தார் வல்லபாய் பட்டேல்” அவர்களின் திருவுருவச்சிலை வரை செல்லவுள்ள தமிழக காவல் துறையின் இருசக்கர வாகன பேரணி 15.10.2021-ம் தேதி கன்னியாகுமரில் தொடங்கியது.

தமிழக காவல்துறை சார்பில் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 31-ம் தேதியை “தேசிய ஒற்றுமை தினமாக” கொண்டாடப்படும். இதை கொண்டாடும் விதமாக, கன்னியாகுமரி முதல் குஜராத் மாநிலம் நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ள “ஒற்றுமையின் சிலை”என்று அழைக்கப்படும் “சர்தார் வல்லபாய் பட்டேல்” அவர்களின் திருவுருவச்சிலை வரை செல்லவுள்ள தமிழக காவல் துறையின் இருசக்கர வாகன பேரணி 15.10.2021-ம் தேதி கன்னியாகுமரில் தொடங்கியது.

இந்த பேரணி நேற்று 16.10.2021-ம் தேதி 12.50 மணிக்கு சேலம் மாநகரத்தை வந்தடைந்தது. இப்பேரணிக்கு கருப்பூர் காவல் நிலைய சரகம், கரும்பலை தீர்த்தமலை கவுண்டர் திருமண மண்டபத்தில் சேலம் மாநகர காவல் துறை சார்பாக அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, அவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. பின்னர் 14.30 மணிக்கு ADSP திரு.G.குமார் அவர்களின் தலைமையிலான 35 காவல்துறையினர் அடங்கிய இருசக்கர வாகன பேரணியை சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர்கள் வடக்கு, திரு.M. மாடசாமி மற்றும் தெற்கு, திரு.N.மோகன்ராஜ் ஆகியோர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.