குரோம்பேட்டையில் பேரறிஞர் அண்ணாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தி ராஜ்பவன் நோக்கி இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

சென்னை குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலையில் இருந்து, அறிஞர் அண்ணா ஊழல் மற்றும் நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் அதன் நிறுவன தலைவர் அன்புசெல்வன் தலைமையில் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக ராஜ்பவன் சென்று மனு அளிக்க இருந்தனர்.
அதற்காக தாம்பரத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்று குரோம்பேட்டை அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டு புறப்படும் போது காவல் துறை அனுமதி மறுத்ததால் பேரணி கைவிடப்பட்டது,
பேரறிஞர் அண்ணாவிற்கு பாரத ரத்னா விருது வழங்கக்கோரி ஆளுநர் மாளிகைக்கு கோரிக்கை மனு பதிவுத் தபாலில் அனுப்பிவைக்கப்பட்டது.