• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரையில் ரேஷன் அரிசியை கடத்திய இருவர் கைது…

ByKalamegam Viswanathan

Feb 15, 2025

மதுரை விமான நிலையம் சாலையில் உள்ள ஈச்சனேரி பகுதியில் 1700 கிலோ ரேஷன் அரிசியை காரில் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர் .

மதுரை விமான நிலையம் செல்லும் சாலை ஈச்சனேரி பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் .

அப்போது அந்த வழியாக வந்த பொலிரோ காரை சோதனை செய்தபோது 40 கிலோ எடை கொண்ட 42 வெள்ளைநிற பாலீத்தின சாக்குகளில் மொத்தம் சுமார் 1680 கிலோ ரேசன் புழுங்கல் அரிசி ஏற்றி வெளி மாவட்டங்களுக்கு கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கே.வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ஆனந்தகுமார்(24), மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த லோடுமேன் அரசு (21) ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்ற ராம்குமார் என்பவர் தலைமறைவாக உள்ள நிலையில் போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.