• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ட்விட்டர் டிரெண்டிங் விஜய்…

Byமதி

Dec 10, 2021

2021 ஆம் ஆண்டு ட்விட்டரில் அதிகம் ட்ரெண்ட் செய்யப்பட்ட ஹேஷ்டேக்குகளில் விஜய்யின் மாஸ்டர் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

ட்விட்டரில், ட்விட்டர்வாசிகள் அல்லது ரசிகர்கள் தங்களுக்கான கருத்துக்களை வெளிப்படுத்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வருகின்றனர். அப்படி உருவாக்கப்படும் ஹேஷ்டேக்கள் டிரெண்டிங் செய்யப்படும். அது இந்திய அளவிலோ உலக அளவிலோ இருக்கும்.

அதனையொட்டி ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்ட ஹேஷ்டேக், அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நடிகர் பெயர் என ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ட்விட்டர் இந்தியா நிறுவனம் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அந்தவகையில் ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டப் பட்டியலில் இந்தியாவில் அதிகம் பகிரப்பட்ட ஹேஷ்டேக்கில் கொரோனா ஹேஷ்டேக் முதலிடத்தில் இருக்கிறது. முதல் 10 இடங்களுக்குள் நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் இடம்பிடித்துள்ளது. இந்த பத்து ஹேஷ்டேக்கிலும் இடம்பிடித்த ஒரே சினிமா பெயர் ‘மாஸ்டர்’ தான். மேலும், சினிமாவில் விஜய்யின் ’பீஸ்ட்’ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிக லைக்குகள் மற்றும் அதிக ரீட்வீட் செய்யப்பட்ட போஸ்டர் என்றும் அறிவித்துள்ளது.

அதேபோல், அதிகம் ட்வீட் செய்யப்பட்ட பாலிவுட் நடிகர்கள் பட்டியலில் நடிகர் சோனு சூட் முதலிடத்திலும் நடிகைகளில் ஆலியா பட் முதலிடத்திலும் உள்ளனர்.