• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

டி.வி.எஸ்.மோட்டார், புதிய மாடலான டி.வி.எஸ். ஜூபிட்டர் 110 (TVS Jupiter 110) எனும் இரு சக்கர வாகனம் அறிமுகம்

BySeenu

Aug 28, 2024

இந்தியாவின் பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான டி.வி.எஸ். மோட்டார் தனது புதிய ஸ்கூட்டர் வகை மாடலான டி.வி.எஸ். ஜூபிட்டர் 110 (TVS Jupiter 110) எனும் அடுத்த தலைமுறை தொழில் நுட்ப அம்சங்களை கொண்ட இரு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.

இரண்டு சக்கர வாகன தயாரிப்பில் உலக அளவில் முன்னனி நிறுவனமாக உள்ள டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்கும் விதமாக தொடர்ந்து புதிய வகை வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில்,டி.வி.எஸ்.மோட்டார் நிறுவனத்தின் புதிய வரவாக, பல அதி நவீன வசதிகளுடன் கூடிய ஜூபிடர் 110 எனும் ஸ்கூட்டர் வகை மாடலை அறிமுகம் செய்துள்ளது.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நட்டசத்திர ஓட்டல் அரங்கில் நடைபெற்ற அறிமுக விழாவில், கம்யூட்டர் விற்பனை பிரிவின் துணை தலைவர் பினோய் ஆண்டனி,
தமிழ்நாடு மண்டல விற்பனை மேலாளர் பத்மநாபன் ஆகியோர் புதிய ஜூபிடர் 110 வாகனத்தை அறிமுகம் செய்தனர்.

புதிய வாகனம் குறித்து செய்தியாளர்களிடம் இருவரும் இணைந்து பேசுகையில்,

இந்த மாடலில் திறன்வாய்ந்த புதிய இஞ்சின், , அதிக மைலேஜ், பர்ஃபாமன்ஸ், பாதுகாப்பு, புதிய தொழில்நுட்பம் உள்ளிட்ட சிறப்புகளுடன் சந்தையில் அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்தனர்.

குறிப்பாக புதிய ஜூபிட்டர் 110 மாடல் பயனாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த புதிய மாடலின் வடிவமைப்பை பொறுத்தவரையில் ஹேண்டில்பார் நன்றாக பொருத்தப்பட்டிருக்கும், கால்கள் வைக்க அதிக இடம், இரண்டு ஹெல்மெட்களை வைப்பதற்கான இட வசதி,முன் பக்கம் எரி பொருள் நிரப்பும் வசதி, எல்.இ.டி. விளக்குகள், ஹெட்லாம்ப் டிசைன் புதுப்பிக்கப்பட்டுள்ளது,
டிஜிட்டல் எல்.சி.டி. ஸ்பீடோமீட்டர், ரியல்டைம் மைலேஜ் இண்டிகேட்டர்,ஹசார்ட் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டு, வடிவமைக்கப்பட்டுள்ளதாக
தெரிவித்தனர்.

மேலும், பயனர்களுக்கு பல்வேறு தகவல்களை வழங்க கூடிய நவீன தொழில் நுட்பங்களை கொண்ட எல்.இ.டி. டிஸ்ப்ளே மற்றும் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி என ஏராளமான வசதிகளை எல்லாம் புத்தம் புதிய டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்கூட்டர் பெற்றுள்ளது.

அதேபோல் எரிபொருள் நிரப்பும் ஒவ்வொரு முறையும் இருக்கையை திறக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் எரிபொருள் நிரப்புவதற்கான ‘கேப்’ வெளிப்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

டி.வி.எஸ். ஜூபிட்டர் 110 நீலம் (Dawn Blue Matte) Galactic Copper Matte, டைட்டேனியம் க்ரே,ஸ்டார் லைட் ப்ளூ, லூனார் வெள்ளை ,மீட்யோர் சிகப்பு ஆகிய வண்ணங்களில் கிடைப்பதாக தெரிவித்தனர்.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய புதிய டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்கூட்டரின் விலை ரூபாய் . 79,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.