• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

TVK விஜய் அவர் இடத்தில் இருந்தால் தான் மதிப்பு – நடிகர் ராதாரவி பளிச் பேட்டி…

BySeenu

Nov 21, 2024

கோவை- பாலக்காடு சாலை கோவைபுதூர் பகுதியில் தனியார் அரங்கில் கோவை மாவட்ட நடிகர் சங்கத்தின் 10 ஆண்டு கலை விழா, தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர் சங்கத்தின் கோவை மாவட்டத்தின் இரண்டாம் ஆண்டு விருது விழா ஆகியவை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய நடிகர் ராதாரவி, இந்த விழாவிற்கு வராதவர்களின் புகைப்படத்தை பேனரில் போடும் பொழுது கோபம் வருவதாக தெரிவித்தார். நாம் இல்லாதவர்களை புகழ்ந்துதான் நாசமாகி விட்டோம் எனவும் கூறினார். காந்தியை சுட்டுக் கொன்றது இந்தியன்தான் எனவும், காந்தி நாட்டிற்கு கெட்டது ஒன்றும் செய்யவில்லை என தெரிவித்தார்.

நாடகக் கலையில் மிகப்பெரிய கஷ்டங்கள் உள்ளே இருக்கிறது எனவும், ஆனால் அதையெல்லாம் வெளியில் காட்டிக் கொள்ளாமல் நாடக கலைஞர்கள் அவர்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள் என தெரிவித்தார். இது போன்ற நிகழ்ச்சியை நடிகர் சங்கத்தில் செய்வோமா என்று தெரியவில்லை. நான் இங்கு வரவில்லையென்றால் நல் உள்ளங்களை இழந்திருப்பேன் என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராதாரவி, செய்தியாளர் சந்திப்பு என்றாலே பக் என்று உள்ளது எனவும், இந்த நிகழ்ச்சியை பற்றி மட்டும் கேள்வி கேளுங்கள் என செய்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டார். நாட்டுப்புற கலைஞர்கள் இல்லையென்றால் கிராமங்களில் நிகழ்ச்சியே நடக்காது எனவும், ஜல்லிக்கட்டு காளையை போன்று தான் நாட்டுப்புற கலைஞர்கள் தெய்வசக்தி வாய்ந்தவர்கள் என புகழ்ந்தார். மேலும் நாடகக்கலை என்று சொன்னவுடன் இந்த நிகழ்ச்சிக்கு விரும்பி தான் வந்தேன் எனவும், நானும் ஒரு நாடக கலைஞரின் மகன் தான் என தெரிவித்தார்.

நாடகக் கலைஞர்களை செய்தியாளர்கள் பெரிது படுத்துங்கள் எனவும் கேட்டுக்கொண்டார். நாடக கலைஞர்களுக்கு அரசு தற்பொழுது வழங்கி வரும் உதவித்தொகை 3000 ரூபாயை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கினால் மிகவும் மகிழ்ச்சி எனவும், நாடகக் கலைஞர்களுக்கு அரசு நன்றாகவே உதவி செய்கிறது எனவும் கூறினார். நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் குறித்தான கேள்விக்கு கையெடுத்து கும்பிட்ட அவர் பேசுவதற்கு மறுத்தார். Suggestion யார் வேண்டுமானாலும் சொல்லலாம், சூரியன் காலையில் உதிப்பதும் அஸ்தமிப்பதும் மாற்றி அமைத்தால் நன்றாக இருக்குமா? என்று நான் யோசிக்கிறேன். அந்த இடத்தில் இருந்தால் தான் வலி தெரியும் என கூறி சென்றார்.