• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திக்கு முக்காட வைக்கும் த்ரிஷா

Byதன பாலன்

Apr 25, 2023

பொன்னியின் செல்வன் 2′ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் அழகிய சேலையில் வந்து ரசிகர்கள் மனதை மயக்கியுள்ளார் த்ரிஷா இது குறித்த போட்டோஸ் இதோ…
இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம், ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது. எனவே படத்தின் புரோமோஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது.படக்குழுவினர், சென்னை, கொச்சின், கோயம்பத்தூர், டெல்லி, ஐதராபாத் ஆகிய இடங்களுக்கு நேரடியாக சென்று படம் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்து வருகிறார்கள்.இந்த புரோமோஷன் வேலைகளில் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஆதித்த கரிகாலனான விக்ரம், குந்தவை த்ரிஷா, பூங்குழலி ஐஸ்வர்யா லட்சுமி, அருண் மொழி வர்மன் ஜெயம் ரவி, வந்திய தேவனான கார்த்தி, மற்றும் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சோபிதா துளி பாலா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னுடைய பர்சனல் காரணங்களுக்காக இந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், நேற்று ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியிலும், கடந்த மாதம் சென்னையில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவிலும் கலந்து கொண்டார்.ஹைதராபாத்தில் நடந்த பட புரமோஷனில்… கருப்பு நிற சேலையில், மிகவும் எளிமையாக கழுத்தில் ஒரே ஒரு ஜோக்கர் மற்றும் அதற்க்கு மேட்சிங்காக இவர் அணிந்திருந்த கம்மல் என மிதமிஞ்சிய அழகில் இருந்த த்ரிஷாவை பார்க்க 2 கண்கள் பத்தாது போல என பெருமூச்சு விட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.