திருச்சி மாநகர், திருச்சி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட வட்டார நகர பேரூர் கிராம காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை தலைமையில் LKS மஹாலில் இன்று நடைபெற்றது. அதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர்.மனோகரன் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் Ex MP, காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் கிறிஸ்டோபர் திலக், அமைப்பு செயலாளர் ராம் மோகன், துணை தலைவர் சொர்ண சேதுராமன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் பி.கோவிந்தராஜன் திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் ஆர்.கலைச்செல்வன், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் திரு. எல். ரெக்ஸ், பொதுசெயலாளர் செல்வம் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.