திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே கூலி படம் பார்க்க சென்றுவிட்டு வீடு திரும்பும்போது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த அரசு பள்ளி மாணவனுக்கு,ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் மாணவன் புகழ்தரன்(9),இவர் கன்னார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜனாபாண்டி(35),பிரியா(30) தம்பதியரின் ஒரேமகன் ஆவார்,
ஜனாபாண்டியின் குடும்பத்தினர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் திண்டுக்கல்லில் உள்ள திரையரங்கு ஒன்றுக்கு நடிகர் ரஜினி நடித்துள்ள கூலி படத்திற்கு சென்று விட்டு இரவு 11 மணியளவில் வீடு திரும்பும் போது, சுமார் முப்பது கிலோ மீட்டர் கடந்து வந்தும் இன்னும் ஒரு சில நிமிடங்களில் தங்களது வீட்டுக்கு சென்று விடலாம் என்ற வெரும் ஒரு கிலோமீட்டர் தூரம் மட்டுமே உள்ள போது,எதிர்பாராத விதமாக முன்னாள் சென்ற லாரி திடீரென பிரேக் போடவே லாரியின் பின்னல் அதிவேகமாக மோதியதில் இருசக்கர வாகனத்தில் முன்னால் அமர்ந்து வந்த மாணவன் புகழ்தரன் தலை நசுங்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தான், பலத்த காயம் அடைந்த அவனது தாய் தந்தையர்கள் ஜனாபாண்டி மற்றும் பிரியா தம்பதியினரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் அம்மையநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பல்வேறு திறமைகளுடனும் சிறப்பாகவும்,அனைவரிடம் அன்பாகவும் பழகி வந்த மாணவன் புகழ்தரள் இழப்பால் சோகத்தில் மூழ்கிய ஆசிரியர்கள்,உடன் பயின்ற மாணவ மாணவியர்கள் புகழ் தரனின் புகைப்படத்திற்கு கண்ணீர் மல்க மலரஞ்சலி செலுத்தினர்.இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடம் மட்டுமின்றி பள்ளி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.