இசை மேதை மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்களின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் உள்ள ஸ்ரீ மகா பெரியவா கோவிலில் வைத்து அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் தலைவர் நெல்லை பாலு தலைமையில் ஆடிட்டர் சேதுமாதவா, வாசுதேவன்
உள்ளிட்டோர் அவரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினர்
தொடர்ந்து பாடகர்கள் ஜோசப், பரணி மகேஷ் உள்ளிட்டோர் எஸ்பிபி பாடிய ஜாதி மல்லி பூச்சரமே.. சந்தோஷம் சந்தோஷம் வாழ்வில் ஊர்வலம் உள்ளிட்ட எஸ்பிபி யின் பாடல்கள் பாடி பாடல்கள் மூலம் அஞ்சலி செலுத்தினர்.
இந்தப் நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் இரண்டு நிமிட அஞ்சலி செலுத்திய பிறகு புஷ்பா அஞ்சலி செலுத்தினர்.











; ?>)
; ?>)
; ?>)