• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

இனி புதைவிட மின்கம்பிகளாக மாற்றம்-செந்தில்பாலாஜி

Byகாயத்ரி

Apr 28, 2022

கோயில் தேரோட்ட வீதிகளில் உள்ள மின் கம்பிகள் இனி புதைவட மின்கம்பிகள் ஆக மாற்றப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற சப்பர திருவிழாவில் மின்சாரம் தாக்கி தீ விபத்து ஏற்பட்டதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவே அதிர்வலையை ஏற்படுத்தியது..

இந்நிலையில் தற்போது தமிழக சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, கோயில் தேரோட்ட வீதிகளில் உள்ள மின் கம்பிகள் இனி புதைவட மின்கம்பிகள் ஆக மாற்றப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் திருவாரூர் உள்ளிட்ட 3 கோயில் தேரோடும் வீதிகளில் மின் இணைப்பை புதைவடமாக மாற்றும் பணி நடக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்..