மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் 11 பஞ்சாயத்துகளை சார்ந்த 25 பூத் கமிட்டி பாக பொறுப்பாளர்களுக்கு பயிற்சி முகாம் மற்றும் ஆலோசனைக்
கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, வடக்கு ஒன்றியச் செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன் மாணிக்கம், கருப்பையா,
சரவணன், தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாசறை மாவட்ட துணைச் செயலாளர் மணிமாறன் வரவேற்றார். முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர் பி உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இதில் நிர்வாகிகள் முன்னாள் யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் விவசாய அணி ஆர்.பி. குமார் கோட்டைமேடு பாலா கச்சக்கட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆலயமணி மூர்த்தி
முடுவார்பட்டி ஜெயச்சந்திரன் மணியன் குருவித்துறை காசிநாதன் மகளிர் அணி சாந்தி மாரிமுத்து உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர் பி உதயகுமார் பேசும்போது கூறியதாவது

வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளில் அதிமுக தொண்டர்கள் தீவிரமாக களப்
பணியாற்றுகிறார்கள் என்ற செய்தி ஆளும் கட்சியினரை நடுநடுங்க வைத்துள்ளது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 42 திறந்ததாக மாவட்ட ஆட்சியர் அறிவிக்கிறார். ஆனால் அங்கு நெல் கொள்முதல் செய்யப்படுவதில்லை .அதிமுக சார்பில் கோரிக்கை வைத்தும் இன்றும் நெல்மணிகள் ரோட்டில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
அதிமுக ஆட்சியில் துணை கலெக்டரை நியமித்து நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டது.
அரசியல் ஆதாயம் தேடுவதில் ஸ்டாலின் கவனம் செலுத்துகிறார். அதிமுக ஆட்சிக்காலத்தில் கோவைக்கும், மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. நாங்க மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வருவோம் என்று திமுக அரசு தெரிவித்தது. ஆனால், தற்போது மத்திய அரசு நிராகரித்து விட்டதாகவும் வாங்க போராடுவோம் என மக்களை அழைக்கிறது. மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, அம்ருத் குடிநீர் திட்டம், தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரி, 18 மாநகராட்சிகளில் ‘ ஸ்மார்ட் சிட்டி திட்டம், இந்தியாவிலேயே அதிகமான வந்தே பாரத் ரயில்களை அதிமுக அரசு மத்திய அரசிடமிருந்து பெற்றது.
திமுக அரசு எதற்கெடுத்தாலும் காரணம் தேடுகிறது. பச்சை பொய்யாக பேசுகின்றனர். எதுவம் உண்மை இல்லை. முதலமைச்சர் உண்மையாக இல்லை. அரசியல் ஆதாயம் தேடுகிற நிலையை தான் இந்த அரசு கடைபிடிக்கிறது. மக்களை ஏமாற்றுகின்ற மக்கள் விரோத அரசுக்கு முடிவுரை எழுத வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். முடிவில் பொறியாளர் குரு. பார்த்திபன் நன்றி கூறினார்.









; ?>)
; ?>)
; ?>)
