• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

“நாகரிகப் பயணம்” திரைப்படத்தின் டிரெய்லர் வெளீயீட்டு விழா!

Byஜெ.துரை

Sep 7, 2025

RICH மூவிஸ் – DSK மூவிஸ் இணைந்து வழங்கும் தாஸ் சடைக்காரன் இயக்கத்தில் நாகரிகப் பயணம் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் தயாரிப்பாளர் P.மணவாளவன் A. செந்தில், புதுவை M.ஜாகீர் உசேன், இயக்குநர் ராதா பாரதி, ஃபைட் மாஸ்டர் ஜாகுவர் தங்கம், தயாரிப்பாளர் ஈகை கருணாகரன் இசை அமைப்பாளர் திவாகர், காண்டியப்பன், அன்னகொடி கன்னன, வர்ணிகா, முபாரக் அலி, ரஜினிகாந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் தயாரிப்பாளர் ஜாகிர் உசேன் அவர்கள் பேசியதாவது,

இன்னும் 25 வருடங்கள் பிறகு எல்லார் வீட்டிலும் அனைத்து பொருட்களும் இருக்கும் ஆனால் அரிசி இருக்காது. ஏனென்றால் விவசாயம் அழிந்து விடும் நிலையில் உள்ளது, விவசாயத்தை சார்ந்த திரைப்படம் எடுக்கலாம் என்று இயக்குநர் தாஸ் சடைக்காரன் என்னிடம் கூறினார், ஆதலால் நாங்கள் இருவரும் சேர்ந்து இத்திரைப்படம் எடுத்துள்ளோம் என்று கூறினார்.
இயக்குநர் தாஸ் சடைக்காரன் பேசியதாவது,

இப்படம் 40-நாட்கள் கடின உழைப்பில் எடுத்துள்ளோம்,மக்கள் அனைவரும் ஆதரவு தாருங்கள் என்றார். ஜாகுவர் தங்கம் பேசியதாவது,

குழந்தைகளை வேலைக்கு அமர்த்தி சிலர் வருவாய் காண்கிறார்கள், கர்நாடகவில் இன்று வரை தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை,அன்றைய திரைப்படப்பிடிப்பில் எங்களுக்கும் பாதுகாப்பு இல்லை எனவே இந்த நிலை மாற வேண்டும்.

கடைசியில் இளைஞர்கள் யாவரும் மது அருந்தி உடலை வருத்திக்கவேண்டாம் , உடல் தான் உங்கள் சொத்து எனவே உடலை பாதுகாத்து கொள்ளுங்கள், இறுதியில் தமிழ் வாழ்க என்று உறக்கமிட்டு உரையை முடித்தார்.