மதுரை மாவட்டம் ராஜாகங்கூர் பகுதியில் சேர்ந்தவர் முத்துக்குமார் இவருக்கு வயது 37 திருமணமாகி ஐந்து மற்றும் எட்டு வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளன இந்த நிலையில் இன்று திருமண நாள் என்பதால் திருமண நாளை கொண்டாடுவதற்காக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து இருசக்கர வாகனம் மூலமாக கருப்பாயூரணி வழியாக அவரது சொந்த ஊரான ராஜாகங்கூர்
வந்து கொண்டு இருந்தார் கருப்பாயூரணி கண்மாய் அருகே வந்த பொழுது நான்கு சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது சிறுவர்கள் இருவர் தண்ணீர் மாட்டிக்கொண்டதை கண்ட சிறுவர்கள் கூச்சலிடமே அப்பொழுது அந்த வழியாக வந்த முத்துக்குமார் உடனடியாக கீழே இறங்கி கம்மாய்க்குள் சிறுவர்களை காப்பாற்றி உள்ளார் எனினும் இவருக்கு நீச்சல் தெரியாது சிறுவர்கள் அனைவரையும் காப்பாற்றிய இவர் சற்று எதிர்பாராத வகையில் சேற்றில் மாட்டிக் கொண்டார் தகவல் அறிந்த கருப்பாயூரணி போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அனுப்பானடி தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு வீரர்கள் முத்துக்குமார் உடலை மீட்டனர் உடலை கருப்பாயூரணி போலீசாரிடம் ஒப்படைத்த தீயணைப்புத் துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சம்பவம் குறித்து மதுரை கருப்பாயூரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சிறுவர்களை காப்பாற்ற போன இளைஞர் திருமண நாளன்று உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மேலும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில் சிறுவர்களை காப்பாற்ற சென்ற இளைஞர் உயிரிழந்ததற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கி குழந்தைகளின் நலன் காக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
திருமண நாளில் ஏற்பட்ட பரிதாபம் தண்ணீரில் மூழ்கிய சிறுவர்களை காப்பாற்றிய நபர் நீரில் மூழ்கி பலி
