திண்டுக்கல் அருகே பொதுமக்கள் ரோடு மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வீரசின்னம்பட்டியில் அரசு பஸ் காலதாமதாக வருவதால் பொதுமக்கள் தொடர்ந்து மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஸ் தாமதத்தால் பள்ளி ,கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

விவசாயிகளும் மார்க்கெட்டுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வர்கள் சிரமப்படுகின்றனர். உரிய நேரத்துக்கு பஸ் விட வேண்டுமென கோரிக்கை வைத்து அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து ஒரு பாதிக்கப்படுகிறோம்.
இதையடுத்து இன்று காலையில் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களை போலீசார் சமாதானப்படுத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.