• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நீலகிரி அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டதால் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கிண்ணாக்கொரை பகுதியில் இரவு நேரங்களில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சாலை ஓரமாக இருந்த மரம் சாய்ந்து விழுந்துபோக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கிண்ணாக்கொரையில் இருந்து உதகைக்கு செல்லும் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் நெடுஞ்சாலை துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து மரத்தை அறுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு மரத்தை அப்புறப்படுத்தினார்கள் போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்த மரம் அப்புறப்படுத்தப்பட்டதால் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.