• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை!…

Byகாயத்ரி

Jan 14, 2022

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் விழாக்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடுகின்ற திருவிழாக்களுக்கு முற்றிலுமாக அரசு தடை விதித்துள்ளது.இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

இதனால், ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் இன்று (14ம் தேதி) முதல் வரும் 18ம் தேதி வரையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகைக்கு முழுவதும் தடை விதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.