தொடர்ந்து பெய்து வரும்தென்மேற்கு பருவமழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அறுவடை துவங்கியதில் இருந்து தக்காளிக்கு போதிய விலை கிடைக்கவில்லை. 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி 80 ரூபாய்க்கு விற்றது. கட்டுப்படியான விலை கிடைக்காததால் சில விவசாயிகள் அவற்றை உழவு ஓட்டி வேரோடு அழித்தனர். இருந்தும் விலை பெரிய அளவில் உயரவில்லை.கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்குகிறது. இதனால் அறுவடை பருவத்தில் உள்ள தக்காளி பெரும்பகுதி அழுகி வருகிறது. எனவே சந்தையில் தக்காளி வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. ஒரு பெட்டி தக்காளி 350 ரூபாய்க்கு விலை போனது. மழை தொடரும் பட்சத்தில் தக்காளி விளைச்சல் மேலும் குறையும். இதனால், தக்காளி விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.
தொடர் மழையால் தக்காளி விலை உயர வாய்ப்பு




