

குமரி மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரும் பொதுவுடமை சிற்பியுமான தோழர் ஜீவானந்தம் 117வது பிறந்தநாள் இன்று மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு குமரி பாராளுமன்ற உறுப்பினர்
விஜய் வசந்த் மாலை அறிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், கிழக்கு மாவட்ட வர்த்த காங்கிரஸ் தலைவர் முருகேசன், மாமன்ற உறுப்பினர் அனுஷாபிரைட், மண்டல தலைவர்கள் செல்வம், சிவபிரபு, கண்ணன், கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் சகாய பிரவீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

