• Fri. Apr 26th, 2024

தஞ்சாவூரில் நிறுவுவதற்காக கன்னியாகுமரியில் தயாராகும் திருவள்ளூர் சிலை

தஞ்சாவூர் தமிழ் தாய் அறக்கட்டளையில் நிறுவுவதற்காக எட்டடி உயர திருவள்ளூர் சிலை மயிலாடியில் தயாராகி வருகிறது.3000 கிலோ எடை கொண்ட ஒரே கல்லினால் ஆன திருவள்ளூர் சிலை வடிவமைப்பதற்கான தொடக்க பூஜை இன்று கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் நடந்தது.


தஞ்சாவூர் தமிழ் தாய் அறக்கட்டளையில் நிறுவுவதற்காக 8 அடி உயர திருவள்ளூர் முழு உருவ சிலை மயிலாடியில் தயாராகி வருகிறது.3000 கிலோ எடை கொண்ட ஒரே கல்லினால் ஆன திருவள்ளூர் சிலையை வடிவமைப்பதற்கான தொடக்க பூஜை இன்று கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் நடந்தது.கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை போன்ற தோற்றத்துடன் இந்த சிலை வடிவமைக்கபட உள்ளது.
வரும் ஜூலை மாதம் 12 ம் தேதி இங்கிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு திருநெல்வேலி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, கடலூர், புதுச்சேரி ,விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் வழியாக செப்டம்பர் 4 ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் ஊர்வலம் நிறைவடைகிறது.பின்னர் அங்கிருந்து எடுத்துவரப்பட்டு தஞ்சாவூர் தமிழ்தாய் கோட்டத்தில் நிறுவப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *