திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று மதுரை இணை ஆணையரின் உத்தரவுப்படி உண்டியல் திறப்பு நடைபெற்றது.
உண்டியல் திறப்புக்கு பின் பக்தர்களின் காணிக்கையை எண்ண தொடங்கினர் கோவில் நிர்வாகிகள். மொத்த உண்டியல் வருமானம் ரூ19,11,333/-(பத்தொன்பது லட்சத்து பதினோராயிரத்து முன்னூற்றி முப்பத்துமூன்று)இதில் தங்கம், வெள்ளி, தகரம், செப்பு மற்றும் பித்தளை என பிரித்து எண்ணியதில்
தங்கம்— 0.672 கிராம்
வெள்ளி—0.763 கிராம்
தகரம்—3.750 கிராம்
செம்பு மற்றும் பித்தளை–2.800 கிராம்
திருக்கோயிலுக்கு வருமானமாக கிடைக்கப்பெற்றது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.