திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்கோவில் பெரிய தேர் புதிதாக அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்த நிலையில் உபயதாரர்கள் வழங்கிய 2 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் கட்டுமானப் பணி இன்று பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டது. இதேபோல் இந்து சமய அறநிலையத்துறை திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் நிதி ரூ 58 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் முருகன் தேர் கட்டுமான பணியும் பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டது.
தமிழகத்தின் நான்காவது பெரிய தேரான அர்த்தநாரீஸ்வரர் கோவில் பெரிய தேர் மற்றும் முருகன் தேர் புதிதாக அமைக்கும் பணி இன்று பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது.ரூ 2 கோடியே 17 லட்சம் உபயதாரர்கள் நிதியுதவியுடன் நூறு டன் இலுப்பை வேம்பு தேக்கு உள்ளிட்ட மரங்களைக் கொண்டு 23 அடி உயரம் 23 அடி அகலம் கொண்ட இரும்பு அச்சுடன் கூடிய பெரிய தேர் அமைக்கப்பட உள்ளது. 12 மாத கால அவகாசத்தில் இந்த தேர் கட்டுமான பணி நடக்க உள்ளது. திருவாரூர் ஆழித்தேர் ஸ்தபதி இளவரசன் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் இந்த தேர் அமைக்கும் பணியை செய்ய உள்ளனர். இதேபோல் திருக்கோவில் நிதி ரூ 58 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் சுப்பிரமணியர் திருத்தேர் அமைக்கப்பட உள்ளது.11அடி உயரம் பதினோரு அடி அகலம் கொண்ட இந்தத் தேரும் ஸ்தபதி ரவி என்பவர் தலைமையிலான குழுவினர் 12 மாத கால அவகாசத்தில் செய்ய உள்ளனர்.தேர் அமைக்கும் பணி பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டது தேர்நிலை அருகில் நடந்த பூஜை நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மண்டல நகர அமைப்பு திட்ட குழு உறுப்பினர் மதுரா செந்தில்,நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஒன்றிய குழு தலைவர் சுஜாதா தங்கவேல் கோவில் அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ரமணி காந்தன் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ் பாபு மற்றும் நகர திமுக செயலாளர் கார்த்திகேயன்.,பி ஆர் டி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன் , லாரி பாடி பில்டர்ஸ் சங்க தலைவர் வெள்ளியங்கிரி வழக்கறிஞர் பரணிதரன், மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் ஊர் பிரமுகர்கள் பல்வேறு சமூகங்களின் பிரதிநிதிகள் என சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.




