• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பயணியிடம் நகை திருடிய மூன்று பேர் கைது !!!

BySeenu

Oct 27, 2025

கோவை அருகே ஓடும் ரயிலில் பயணியிடம் நகை திருடிய தம்பதி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம், மருதகுளம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி. இவர் சம்பவத்தன்று இரவு தனது மனைவி, மகன், மகளுடன் பொள்ளாச்சியில் இருந்து ரயிலில் கோவைக்கு வந்து கொண்டு இருந்தனர். அந்த ரயில் போத்தனூர் அருகே வந்த போது இசக்கியின் மனைவி தலையில் வைத்து படுத்து இருந்த படுக்கை ஒரு சிறுவன் நைசாக திருட முயன்றான். அதை பார்த்து இசக்கி சக பயணிகளிடம் உதவியுடன் அந்த சிறுவனை மடக்கி பிடித்தார். அப்பொழுது அந்த சிறுவனுக்கு ஆதரவாக வாலிபர் ஒருவர் இசக்கியிடம் தகராறு ஈடுபட்டார்.

உடனே இசக்கி அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் இசக்கி தாக்கி விட்டு சிறுவனுடன் இறங்கி தப்பி சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த இசக்கி தங்களின் உடைமைகளை சோதனை செய்து பார்த்த போது பேக்கில் வைத்து இருந்த ஆறு பவுன் தங்க நகைகளை காணவில்லை, இதற்கு இடையே ரயில்வே ஊழியர்கள் வந்து ரயிலை நிறுத்தியது குறித்து இசக்கியிடம் விசாரணை நடத்தினர். அதன் பிறகு அந்த ரயில் 17 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. இதை அடுத்து நகையை திருடு தொடர்பாக நகை திருட்டு தொடர்பாக இசக்கி போத்தனூர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நகை பறிப்பில் ஈடுபட்டது போத்தனூர் செட்டிபாளையம் பாரதி நகரை சேர்ந்த உஜாத் அலி, அவரது மனைவி சத்தியா அவர்களது உறவினரான 12 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. உடனே அந்த மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடு போன நகைகள் மீட்கப்பட்டது.